'இலக்குகள் ஏதும் மிஞ்சவில்லை'; ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும்; டொனால்ட் ட்ரம்ப்.. - Seithipunal
Seithipunal


அணு ஆயுத தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக்கூறி ஈரான் அமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்கு உன்படாத நிலையிலும், அணு ஆயுத போட்டி காரணமாகஇஸ்ரேல் உடன் இணைந்து அமெரிக்கா  ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி காலை முதல் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு ஈரானும் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. அமெரிக்கா ராணுவ தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீதும் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதனால் மத்தியக் கிழக்கு முழுவதும் போர்பதற்றம் நிலவுகிறது. இதுவரை 1350க்கு மேற் பட்டோர் உயிரிழந்துள்ளனர். மத்தியக் கிழக்கு மட்டுமின்றி இந்தப் போரின் தாக்கம் உலகெங்கும் எதிரொலித்துள்ளது.

இந்த சூழலில், ஈரான் மீதான போர்  எந்த நேரத்திலும் முடிவுக்கு வரலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாவது;

"கொஞ்சம் அங்குமிங்கும், நான் எப்போது இது முடிவுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறேனோ, அப்போது இது முடிந்துவிடும்," என தெரிவித்துள்ளார். அதாவது, ஈரானில் தாக்குதல் நடத்துவதற்கு இனி "இலக்குகள் ஏதும் மிஞ்சவில்லை" என்பதால் இந்த முடிவு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த தாக்குதல்கள் காரணமாக ஈரான் ஹார்மோஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. இதனால் ஆசிய நாடுகளுக்கான எரிவாயு, எண்ணெய் இறக்குமதி பெரிதும் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக இந்தியா பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது. இந்த தாக்குதலும் சமையல் எரிவாயு, பெற்றோல் டீசல் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது.

இதனால் உலக நாடுகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இதனை கருத்திற்கொண்டு ட்ரம்ப் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Donald Trump says war on Iran will end soon


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->