'உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்; இல்லையெனில் ஒழிக்கப்படுவீர்கள்'; டிரம்புக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்த ஈரான் அதிகாரி..! - Seithipunal
Seithipunal


அணு ஆயுத போட்டி காரணமாக கடந்த 28 ஆம் தேதி காலை முதல் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.  இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.

அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் சூழ்ந்துள்ள நிலையில் இரு நாட்டு தலைவர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக எச்சரித்து வருகின்றனர். 

முன்னதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய 'ஆபரேஷன் எபிக் பியூரி' என்ற அதிரடி ராணுவ தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டுள்ளதால் இரு நாடுகளுக்கிடையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த தாக்குதல் ஈரானின் ஏவுகணை வலிமையில் 50 சதவீதத்தை அழித்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னதாக அறிவித்திருந்தார். 

35 ஆண்டு காலமாஜி ஈரானின் உச்ச அத்தலைவராக இருந்த கமேனி கொல்லப்பட்டத்தை தொடர்ந்து அவரது மகனான மொஜ்தபா கமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவரும் இதுவரை பொது வெளியில் தோன்றவில்லை. அதறலு காரணம் தாக்குதலில் அவரும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் அளித்த பேட்டி ஒன்றில், 'மொஜ்தபா கமேனியின் நியமனம் மிகப்பெரிய தவறு. அவர் திறமையற்றவர்; புதிய தலைவரால் நிம்மதியாக வாழ முடியாது என்று கருதுகிறேன்.

ஈரானின் தலைமைத் தேர்வில் அமெரிக்காவின் பங்களிப்பு இருக்க வேண்டும். அமெரிக்காவால் அங்கீகரிக்காத எந்தவொரு தலைவரும் நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியாது. மொஜ்தபா தனது தந்தையின் தீவிரவாதப் போக்குடைய கொள்கைகளையே பின்பற்றுவார் என்பதால், அவருடன் அமைதியான முறையில் இணங்கிச் செல்வது சாத்தியமற்றது' என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்குப் பதிலடியாக ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

'உங்களை விட பெரிய தலைவர்களால் கூட ஈரானை ஒழிக்க முடியவில்லை. உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்; இல்லையெனில் நீங்கள் ஒழிக்கப்படுவீர்கள்!’ என்று டிரம்பிற்கு பகிரங்கமாக கொலை விரட்டல் விடுத்து எச்சரித்துள்ளார். தலைவர்களின் இந்த வார்த்தை மோதல் சர்வதேச அளவில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Irans top security official Ali Larijani issued death threats to Trump


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->