பெண்கள் அப்பாவி அல்ல...ஆண்கள் தான் உண்மையான பாவம்...! - விமர்சகர்களுக்கு ரவி மோகனின் கருத்து - Seithipunal
Seithipunal


ரவி மோகன் மற்றும் ஆர்த்தி 2009 ஆம் ஆண்டு காதல் உறவினை திருமணமாக மாற்றி, 15 வருடங்கள் இணைபிரியா தம்பதிகளாக வாழ்ந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனால், கடந்த 2024 ஆம் ஆண்டு, ரவி மோகன் மனைவியிடமிருந்து விவாகரத்தை கேட்டு நீதிமன்றத்தை அணுகிய போது, இவர்களின் பிரிவு ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆழ்ந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியது.

இதற்கிடையில், ரவி மோகன் பாடகி கெனிஷா இடையே காதல் உறவு இருப்பதாக சமூக வலைதளங்களில் பரபரப்பு தகவல்கள் பரவின. பொது நிகழ்வுகளில் இருவரும் ஒன்றாக தோன்றும் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

மேலும், ரவி மோகனும், விவாகரத்து பெற்ற மனைவி ஆர்த்தியும் சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தும் விதமாக பதிவுகள் பகிர்ந்து வருகின்றனர்.இந்நிலையில், ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிட்ட பதிவில் விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது,"நான் என் வாழ்கையை அமைதியான முறையில் கட்டமைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ சொல்லிக் கொள்ளுங்கள். பெண்கள் செய்வது மட்டுமே சரி என நீங்கள் எண்ணினாலும், உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் ஆண்கள் என்பதை நமது நீதித்துறையும் ஏற்றுக்கொள்கிறது.

என் மனதையும், நேசத்திற்குரியவர்களுக்கு நான் செய்தவற்றையும் ஒரு நாள் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு மனிதனை அமைதியுடன் வாழ விடுங்கள். உங்கள் கேவலமான எண்ணங்களை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள்.

நான் என் வழியில் முன்னேறுகிறேன்".இதோடு, அவர் ‘வாழ்க்கை என்பது அன்பில்’ என்ற பாடலுடன் ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடம் தனது உணர்வுகளை பகிர்ந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Women not innocent Men ones who truly pitiable Ravi Mohan response critics


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->