“என்னை கல்யாணம் பண்ணிக்கப்போறவருக்கு 100 ஏக்கர் நிலம் இருக்கணும்..சமையல் தெரியணும்!” – மீனாட்சி சௌத்ரியின் பேச்சு வைரல் - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மீனாட்சி சௌத்ரி. இந்தியில் அறிமுகமான இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிஸியான நாயகியாக திகழ்கிறார். துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றார். மேலும் நடிகர் விஜய்யுடன் ‘கோட்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மீனாட்சி சௌத்ரி கூறிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அந்த பேட்டியில் அவர் கூறுகையில்,“என்னை கல்யாணம் பண்ணிக்கப்போற பையனுக்கு குறைந்தது 100 ஏக்கர் நிலமாவது சொந்தமாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், நல்லா சமைக்கவும், துணி துவைக்கவும், அயர்ன் பண்ணவும் தெரிந்திருக்க வேண்டும். வீட்டு வேலைகளை எல்லாம் பொறுப்பாக பார்த்துக்கொள்ளும் ஆளாக இருக்க வேண்டும். சிறிய வேலைகளுக்குக் கூட மற்றவர்களை எதிர்பார்க்காமல் தானே செய்து கொள்ளும் பழக்கம் இருக்க வேண்டும்,” என்று ஜாலியாக தெரிவித்தார்.

மீனாட்சியின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல நெட்டிசன்கள் இதை வைத்து நகைச்சுவையான கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.“இதற்கெல்லாம் வீட்டு வேலைக்கு ஒருவரை வைத்துக்கொள்ளலாமே”,“100 ஏக்கர் இருந்தால் அவர் ஏன் உங்கள் பின்னால் வர வேண்டும்?”“கணவர் வேண்டாம், வீட்டு வேலைக்காரர்தான் வேண்டுமோ?”
என்றெல்லாம் கிண்டலான கமெண்ட்களும் வெளியாகி வருகின்றன.

பொதுவாக நடிகைகள் தங்களுடன் சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் அல்லது தொழிலதிபர்களை திருமணம் செய்து கொள்வது வழக்கமாக இருக்கிறது. ஆனால் மீனாட்சி சௌத்ரி தனது வருங்கால கணவர் வீட்டு வேலைகளில் திறமையாக இருக்க வேண்டும் என கூறியது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.

மீனாட்சி சௌத்ரி நடித்த கடைசி படம் ‘சங்கராந்திக்கு வஸ்துன்னாம்’ என்ற தெலுங்கு திரைப்படமாகும். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The man who wants to marry me must have 100 acres of land and know how to cook Meenakshi Chaudhary speech goes viral


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->