புதிய வாடகை விதிகள் 2026 ...! சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மையா? - முழு விபரம் - Seithipunal
Seithipunal


'புதிய வாடகை விதிகள் 2026' என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல்கள், வாடகைதாரர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் வாடகைச் சட்டங்களில் மத்திய அரசு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாகவும், அட்வான்ஸ் தொகை மற்றும் வீட்டை காலி செய்யும் நடைமுறைகளில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்தத் தகவல்களின் விபரம் இதோ:வீடுகளுக்கு இரண்டு மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸாக வாங்க வேண்டும்; வணிக இடங்களுக்கு 6 மாத வாடகை வரை அட்வான்ஸ் பெறலாம்.
12 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வாடகையை உயர்த்த முடியும். அதற்கு 90 நாட்களுக்கு முன்பே வாடகைதாரருக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.
வீட்டில் பெரிய பழுதுகள் இருந்தால், உரிமையாளர் 30 நாட்களுக்குள் சரிசெய்து தர வேண்டும். இல்லையெனில் வாடகைதாரரே பழுது பார்த்துவிட்டு, அந்தச் செலவை வாடகையில் கழித்துக் கொள்ளலாம்.
மின்சாரம், தண்ணீரைத் துண்டிப்பது அல்லது வாடகைதாரரை மிரட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
வாடகை தொடர்பான வழக்குகளை நீதிமன்றங்கள் 60 நாட்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்.
இருப்பினும், இந்த விதிகள் 2026-ஆம் ஆண்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில், இவை 2021-ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 'மாதிரி குத்தகைச் சட்டத்தின்' (Model Tenancy Act - MTA) ஒரு பகுதியாகும். இந்தச் சட்டம் மாநில அரசுகளுக்கு ஒரு வழிகாட்டியாக மட்டுமே வழங்கப்பட்டது.


இந்திய அரசியல் சாசனப்படி, நிலம் மற்றும் வீட்டுவசதி தொடர்பான சட்டங்களை இயற்றும் அதிகாரம் அந்தந்த மாநில அரசுகளுக்கே உண்டு. எனவே, ஒவ்வொரு மாநிலமும் இந்த மாதிரிச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு, அதற்கேற்பத் தனது சொந்த விதிகளை உருவாக்க வேண்டும்.

இதுவரை அசாம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே இது தொடர்பான வரைவு அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

எனவே, '2026 புதிய விதிகள்' என்று பரப்பப்படும் தகவல்கள் ஏற்கனவே உள்ள ஒரு வழிகாட்டுதலின் தொகுப்பே தவிர, தற்போது அமலான புதிய சட்டம் அல்ல.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New Rental Rules 2026 Information Circulating Social Media True Full Details


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->