ஜெயிலர் 2 படத்தின் புதிய தகவல்...! - போலீஸ் அதிகாரியாக ஷாருக்கான்...!
New Update Jailer 2 Shah Rukh Khan Police Officer
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 2' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னை, கேரளா, கோவா மற்றும் மைசூர் ஆகிய இடங்களில் முடிந்துவிட்டது.
முதல் பாகத்தில் நடித்தவர்களுடன் சில புதிய நடிகர்களும் இதில் இணைந்துள்ளனர். இந்தப் படம் வரும் ஜூன் 12-ஆம் தேதி வெளியாகும் என்று ரஜினிகாந்த் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ஒரு வார கால படப்பிடிப்பில் கலந்துகொண்டு காவல்துறை அதிகாரியாக கௌரவத் தோற்றத்தில் (Cameo Role) நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் தனது காட்சிகளை முடித்துவிட்டாலும், ஷாருக்கான் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் படமாக்கப்பட வேண்டியுள்ளது.
English Summary
New Update Jailer 2 Shah Rukh Khan Police Officer