ஏர் இந்தியா விமானங்கள் மார்ச் 13 வரை ரத்து...! - பயணிகளுக்குச் சிறப்புச் சலுகை அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலால், மேற்கு ஆசிய நாடுகளுக்கான விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் வரும் மார்ச் 13-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்காக ஏர் இந்தியா நிறுவனம் சில சலுகைகளை வழங்கியுள்ளது. அதன்படி, ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி வேறு தேதிகளுக்கு மாற்றிக்கொள்ளலாம் அல்லது பயணத்தை ரத்து செய்து முழுப் பணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

இதற்காக இணையதளம் அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகலாம்.மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பயணிகள் அங்கிருந்து இந்தியாவின் எந்த நகரத்திற்கும் கூடுதல் கட்டணமின்றி மாற்று விமானங்கள் மூலம் பயணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

உதாரணமாக, துபாய்-ஜெய்ப்பூர் பயணிகள் ரஸ் அல் கைமா விமான நிலையம் வழியாக டெல்லிக்குச் செல்லலாம்.

அத்துடன், நிலைமையைப் பொறுத்து கூடுதல் சிறப்பு விமானங்களை இயக்குவது குறித்தும் அந்நிறுவனம் ஆலோசித்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Air India Flights Cancelled Until March 13 Special Offer Announced Passengers


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->