சிலிண்டர் தட்டுப்பாட்டைத் தடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை....! - Seithipunal
Seithipunal


அரபு நாடுகளில் நடக்கும் போரினால் இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் வருவது தடைபட்டுள்ளது. இதனால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

பல நகரங்களில் கடைகளுக்கான (வணிகப் பயன்பாடு) சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், வீடுகளுக்குத் தேவையான சிலிண்டர்கள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

தமிழகத்தில் தற்போது மூன்று வாரங்களுக்குத் தேவையான வீட்டு உபயோக சிலிண்டர்கள் கையிருப்பு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், சென்னை மற்றும் புதுச்சேரியில் வணிக சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மதுரை, நெல்லை, இளையான்குடி ஆகிய இடங்களில் வணிக சிலிண்டர்கள் இருப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister MK Stalin holds urgent consultations officials prevent cylinder shortage


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->