எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்...! பதுக்கல்காரர்களுக்கு செக் வைக்கும் 'எஸ்மா' சட்டம்...! - மத்திய அரசு
Risk Fuel Shortage ESMA Act Curb Hoarders Central Government
அரபு நாடுகளில் நடக்கும் போர் காரணமாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வருவது நின்றுள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதைச் சமாளிக்க, பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் அனைவருக்கும் சரியாகக் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு 'எஸ்மா' (ESMA) சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
1951-ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்தச் சட்டத்தின் மூலம் எரிபொருட்களின் விலையை அரசே நிர்ணயிக்கும் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தை நேரடியாகக் கண்காணிக்கும்.
பெட்ரோல், டீசல் அல்லது சிலிண்டர்களை யாராவது திருட்டுத்தனமாகப் பதுக்கி வைத்தால், அவர்கள் மீது கடுமையான அபராதம் விதிக்கப்படுவதோடு கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Risk Fuel Shortage ESMA Act Curb Hoarders Central Government