போரால் துபாயில் சிக்கிய இந்தியர்கள்: 64 குடியிருப்புகளை இலவசமாக தந்த தொழிலதிபர்...! - Seithipunal
Seithipunal


மத்திய கிழக்கு பகுதிகளில் நீடித்து வரும் போர் சூழ்நிலை காரணமாக விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக துபாயில் இருந்து இந்தியா திரும்ப வேண்டிய பலர் அங்கு சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணத் திட்டங்கள் முற்றிலும் தடைபட்டுள்ளன.

மேலும் பலரின் ஓட்டல் முன்பதிவு காலம் முடிந்ததால் தங்க இடமின்றி பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.இந்த சூழ்நிலையில் துபாயில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் யோகேஷ் தோஷி மனிதநேய உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

துபாயில் உள்ள மிசான் குழுமத்தின் தலைவரான அவர், அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தற்காலிகமாக தங்கி கொள்ள தனது 64 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடத்தை வழங்கியுள்ளார்.

இந்த குடியிருப்புகளில் தங்குமிடம் மட்டுமல்லாமல், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து யோகேஷ் தோஷி தெரிவித்ததாவது," இந்த மனிதநேய முயற்சி ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படும் இந்திய மக்கள் மன்றம் மற்றும் துபாயில் செயல்படும் இந்திய துணைத் தூதரகம் ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஏற்பாட்டின் மூலம் இதுவரை 125-க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு தற்காலிக தங்குமிடம் கிடைக்க உதவியுள்ளது.போரால் உருவான அவசரநிலையிலும் மனிதநேய உணர்வுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த உதவி பலருக்கும் பெரிய நிம்மதியை அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indians Stranded Dubai Due War Businessman Offers 64 Residences Free


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->