ஹோர்முஸ் ஜலசந்தியில் பதற்ற வெடிப்பு...! - ஈரானின் 16 கண்ணிவெடி கப்பல்களை சிதறடித்த அமெரிக்கா...! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்டுள்ள போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இன்று 12-வது நாளை எட்டியுள்ள இந்த மோதலில் இருதரப்பும் இடைவிடாத தாக்குதல்களை நடத்தி வருகின்றன.அமெரிக்கா தெரிவித்ததன்படி, ஈரானின் ராணுவ உள்கட்டமைப்புகள், விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 44 போர்க் கப்பல்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஹோர்முஸ் ஜலசந்தி அருகே கடலில் கண்ணிவெடிகளை பதிக்க தயாராக இருந்த 16 ஈரான் கடற்படை கப்பல்களையும் தாக்கி அழித்ததாக அமெரிக்க மத்திய ராணுவ கட்டளை பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கான வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.உலகின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% நடைபெறும் முக்கிய கடற்பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்பே எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், இஸ்ரேலும் இன்று ஈரான் மீது கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தியது. தலைநகர் தெக்ரான் உள்ளிட்ட பல நகரங்களில் ராணுவ இலக்குகளை குறிவைத்து குண்டுவீச்சு நடத்தப்பட்டது. இஸ்பஹான் நகரில் நடந்த தாக்குதலில் அங்குள்ள ரஷ்ய துணைத் தூதரக கட்டிடம் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்க ஈரான், இன்று அதிகாலை இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை ஏவியது. டெல் அவிவ் தெற்கே உள்ள செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மையம் மற்றும் ஜெருசலேம், ஹைபா பகுதிகளில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களையும் குறிவைத்து ஈரான் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் பல டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக தெரிவித்துள்ளன.

மேலும் ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே அமெரிக்க அதிகாரிகள் தங்கியிருந்த தளத்தை குறிவைத்து ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Explosion Tension Strait of Hormuz US Obliterates 16 Iranian Mine Laying Vessels


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->