சர்வதேச போர்க்குற்றம் ; அமெரிக்கா, ஈரான் தாக்குதல்களில் குறிவைக்கப்படும் நீர் நிலையங்கள்..? மத்திய கிழக்கில் குடிநீர் தட்டுப்பாடு..! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல்- அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகள் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்துகிறது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றத்தால் பெட்ரோலிய எண்ணெய் விநியோகத்தை விட அங்கு குடிநீர் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் அதன் விலை உயர்வு மட்டுமே உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது.

முன்னதாக கடந்த 1991-ஆம் ஆண்டு நடந்த வளைகுடா போரின் போது, பொதுமக்களின் குடிநீர் ஆதாரங்கள் இலக்கு வைக்கப்பட்ட நிகழ்வுகள் சர்வதேச விதிகளுக்கு அப்பாற்பட்டு அரங்கேறின. அதாவது, எண்ணெய் கிணறுகள் தீப்பற்றி எரிந்ததை விட, குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முடங்கியதே பெரும் பதற்றத்திற்கு காரணமானது.

இந்நிலையில், தற்போது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் மோதல்கள் முற்றியுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலையை விட குடிநீர் பாதுகாப்பே பெரும் நீண்டகால திட்டம் சார்ந்த அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

குறிப்பாக துபாய், குவைத் மற்றும் தோஹா போன்ற நகரங்கள் இயற்கை நன்னீர் ஆதாரம் எதுவும் இல்லாத  காரணத்தினால், கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களையே முழுமையாக நம்பியுள்ளன. 

பொதுவான புள்ளி விபரங்களின்படி, குவைத்தின் குடிநீர் தேவையில்லை 90 சதவீதமும், ஓமனின் தேவையில் 86 சதவீதமும், சவுதி அரேபியாவின் தேவையில் 70 சதவீதமும் இந்த கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமே பூர்த்தியாகின்றன. கச்சா எண்ணெய் இல்லதஹ் நிலையில் அதற்கு மாற்றாக கொரோனா காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் போன்று பல மாற்று வழிகளை ஏற்படுத்த முடியும். 

ஆனால், இந்த குடிநீர் நிலையங்கள் தாக்கப்பட்டால் சில நாட்களிலேயே ஒட்டு மொத்த குடிநீர் விநியோகமும் முடங்கிவிடும்  பெரும் அபாயம் உள்ளது. தற்போதைய சூழலில் கடந்த 02-ஆம் தேதி ஈரானிய ஏவுகணைகள் துபாயின் ஜபெல் அலி துறைமுகத்திற்கு அருகில் உள்ள மிகப்பெரிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து விழுந்தன.

அடுத்ததாக, புஜைரா நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பஹ்ரைனில் உள்ள ஒரு குடிநீர் நிலையமும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. 

இதற்கு பதிலடியாக ஈரான் தரப்பில் கூறுகையில், 'கெஷ்ம் தீவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலால் 30 கிராமங்களுக்கான குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. இவ்வாறு குடிநீர் விநியோகத்தை தாக்குவது சர்வதேச சட்டப்படி போர்க்குற்றமாகும். இருப்பினும், இந்த நீர்நிலைகள் மீதான தாக்குதல் தொடர்வது மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கும் என அஞ்சப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Water shortage in the Middle East due to US and Iran attacks


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->