மொபைல் டேட்டா பயன்படுத்துவோர் கவனத்திற்கு; 1 ஜிபி-க்கு ரூ.1 தனி வரி; மத்திய அரசு ஆலோசனை..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்படுத்துவதற்கு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மொபைல் டேட்டா பயன்படுத்துவதற்கு தனியாக வரிவிதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு தொலைத்தொடர்புத் துறைக்கு செப்டம்பர் மாதம் வரை கால அவகாசம் அளித்துள்ளது.

இந்த திட்டத்தின் படி, கூடுதல் வருவாய் ஈட்ட மற்றும் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் டிஜிட்டல் அடிமைத்தனம் மற்றும் திரை நேரத்தைக் குறைப்பது இதன் முக்கிய நோக்கங்கள் என கூறப்படுகிறது.

அதாவது, ஒரு ஜிபி (GB) டேட்டாவிற்கு ரூ.1 வரி விதிக்கப்பட்டால் கூட, அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.22,900 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது மொபைல் ரீசார்ஜ்களுக்கு 18% ஜிஎஸ்டி (GST) வசூலிக்கப்படுகிறது. இந்த புதிய வரி அமலுக்கு வந்தால் இணையப் பயன்பாட்டுச் செலவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஆனால் இது டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியை மேலும், பாதிக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Central government proposes to impose a separate tax of Rs 1 per 1 GB of mobile data usage


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->