போதைப்பொருள் வழக்கு - ஜாமீன் கேட்டு நடிகர்கள் ஸ்ரீ காந்த், கிருஷ்ணா மனு.!!
actors sri kanth and krishna apply bail in chennai high court
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீ காந்த், கிருஷ்ணா இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவரும் கொகைன் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், நடிகர் ஸ்ரீகாந்தை ஜூலை 7-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே நடிகர் ஸ்ரீ காந்த் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இவரைத் தொடர்ந்து இதே வழக்கில் கைதான மற்றொரு நடிகர் கிருஷ்ணாவும் தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு வருகிற 7-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
English Summary
actors sri kanth and krishna apply bail in chennai high court