மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதாநாயகனாகும் இன்பநிதி!
inbanidhi movie hero mari selvaraj dmk
முன்னாள் நடிகரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி, விரைவில் சினிமா கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் உதயநிதி ஸ்டாலின் கடைசியாக நடித்த மாமன்னன் திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. அதன் பிறகு அவர் முழுநேர அரசியலுக்குத் திரும்பியதால், நடிப்பதிலிருந்து விலகினார்.
இந்நிலையில், அவரின் மகன் இன்பநிதி தற்போது நடிப்பு பயிற்சி எடுத்து வருகிறார். அவரது பயிற்சி விடியோக்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
மேலும், ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பும் அண்மையில் இன்பநிதிக்கு வழங்கப்பட்டது. தற்போது, இன்பநிதி தனது முதல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும், அந்தப் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
inbanidhi movie hero mari selvaraj dmk