காலணி தாக்குதல் முயற்சி: 'அது மறக்க வேண்டிய ஒரு விஷயம்' என்கிறார் பி.ஆர்.கவாய்..! - Seithipunal
Seithipunal


உச்ச நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு வழக்கை விசாரணையில் போது, 71 வயதான ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர், திடீரென காலில் அணிந்திருந்த காலணியை கழற்றி, தலைமை நீதிபதி நோக்கி வீச முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இவ்வாறு காலணியை வீசிய வழக்கறிஞர் கிஷோரை கைது செய்த காவலர்கள், அவரை வெளியே அழைத்து சென்று விசாரித்தனர். அதன் பின்னர் தலைமை நீதிபதி எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என கூறிய நிலையில் வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் விடுவிக்கப்பட்டார். ஆனாலும், இந்திய பார் கவுன்சில் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளதோடு, அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து இன்று தலைமை நீதிபதி கவாய் கூறுகையில், 'திங்கட்கிழமை நடந்ததைக் கண்டு நானும் என்னுடன் அமர்வில் இருந்த மற்றொரு நீதிபதியும் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். எங்களைப் பொறுத்தவரை இது மறக்க வேண்டிய ஒரு விஷயம்' என்று தெரிவித்துள்ளார். 

இவரை தொடர்ந்து அந்த அமர்வில் இருந்த நீதிபதி உஜ்ஜல் பூயான் கூறுகையில், 'இந்த தாக்குதல் முயற்சி குறித்து எனக்கு எனது சொந்தக் கருத்துக்கள் உள்ளன. அவர் இந்தியாவின் தலைமை நீதிபதி; இது நகைச்சுவைக்கான விஷயம் அல்ல,' என்று குறிப்பிட்டுள்ளார். இது உச்ச நீதிமன்றத்துக்கு ஏற்பட்ட அவமானம்” என தெரிவித்தாதுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The shoe attack attempt is something to forget says PR Kawai


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->