வெற்றி பாடலின் நடன நடிகை நாக துர்கா...! பிரபல நடிகர் படத்தில் கதாநாயகியா...?
Naga Durga dancer from hit song she going heroine popular actors film
நாட்டுப்புற நடன உலகில் இருந்து சமூக ஊடக வைரல் நட்சத்திரமாக உயர்ந்தவர் நாக துர்கா. பாரம்பரிய நடனத்தில் தன்னுடைய தனித்துவமான அசைவுகளாலும், வெளிப்பாட்டாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், “தரிபொன்தொத்துண்டு” (DJ பதிப்பு) பாடல் மூலம் ஒரே இரவில் பிரபலமானார்.
இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி, தற்போது யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.இணைய உலகில் கிடைத்த இந்த அபார வரவேற்பே, நாக துர்காவை வெள்ளித்திரை வாசலுக்கு அழைத்து வந்துள்ளது.

நடிகர் பவிஷ் கதாநாயகனாக நடிக்கும் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற தமிழ் படத்தில், கதாநாயகியாக நாக துர்கா அறிமுகமாகிறார். இது அவரது கலைப் பயணத்தில் புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.இதற்கிடையே, சமீபத்தில் அவர் கலந்து கொண்ட ஒரு நேர்காணல், ரசிகர்களிடையே கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
அந்த உரையாடலில், தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் பிரபாஸின் தீவிர ரசிகை தான் என நாக துர்கா வெளிப்படையாக தெரிவித்தார்.
சிறுவயதிலிருந்தே பிரபாஸ் மீது கொண்ட ஈர்ப்பு தனக்குள் வேரூன்றியதாகவும், எட்டாம் அல்லது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் காலம் வரை, தனது அறை முழுவதும் பிரபாஸின் புகைப்படங்களே நிரம்பியிருந்தது என்றும் அவர் நகைச்சுவையுடன் பகிர்ந்தார்.
பாரம்பரிய மேடையிலிருந்து வைரல் வீடியோ, அங்கிருந்து வெள்ளித்திரை வரை நாக துர்காவின் இந்தப் பயணம், சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
English Summary
Naga Durga dancer from hit song she going heroine popular actors film