அந்த காட்சியில் நடிக்க வற்புறுத்திய இயக்குனர்..? 20 வயதில் தமன்னாவுக்கு ஏற்பட்ட கசப்பணம் அனுபவம்..!
The director pressured Tamannaah to act in an intimate scene when she was 20 years old
இந்திய சினிமாவில் தென்னிந்திய மற்றும் பாலிவுட் திரைப்படங்கள் என நடிகை தமன்னா தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். இவர், திரையுலகில் கால் பதித்து கிட்டத்தட்ட இரண்டு சகாப்தங்கள் ஆகியுள்ளது.
தற்போதுள்ள நடிகைகளுடன் போட்டியிட்டு ஈடாக அதே அழகு மற்றும் கவர்ச்சியுடன் நடிப்பதுடன், சிறப்புப் பாடல்கள் மூலமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். குறிப்பாக, தமன்னா ஒரு சிறப்புப் பாடலில் நடிக்க சுமார் ரூ. 6 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தான் 20 வயதில் இருக்கும் போது சினிமாவில் சந்தித்த ஒரு கசப்பான அனுபவத்தைப் பற்றி சமீபத்திய நேர்காணலில் மனம் திறந்துள்ளார். அதாவது, ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, நெருக்கமான காட்சியில் நடிக்க இயக்குனர் வற்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

அந்தக் காட்சியில் நடிக்க தனக்கு அசௌகரியமாக இருந்ததாகவும், அதை இயக்குனரிடம் நேரடியாக தெரிவித்ததாகவும் கூறினார். ஆனால், அந்த நேரத்தில், இயக்குனர் அனைவரின் முன்னாடி ''கதாநாயகியை மாற்றுங்கள்'' என்று கூறியதாக தமன்னா தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அந்தக் காட்சிக்காக இயக்குனர் தனக்கு மிகுந்த அழுத்தம் கொடுத்ததாகவும், இருந்தாலும் மனம் தளராமல் உறுதியாக நின்றதாகவும், என்ன நடந்தாலும் அதை எதிர்கொள்ளும் தைரியத்தை அந்த நேரத்தில் பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இறுதியில், அந்த இயக்குனர் மன்னிப்பு கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேட்டியை பார்த்த நெட்டிசன்கள் அது எந்த படம், எந்த இயக்குனர் என்பதற்கான விவரங்களை ஆராய தொடங்கியுள்ளனர்.
English Summary
The director pressured Tamannaah to act in an intimate scene when she was 20 years old