இந்தோனேசியாவில் 11 பயணிகளுடன் சென்ற விமானம் மாயம்; தேடுதல் பணி தீவிரம்..!
A plane carrying 11 passengers has gone missing in Indonesia
இந்தோனேசியா ஜாவா தீவில் உள்ள யோக்யகர்த்தா நகரில் இருந்து அந்நாட்டின் சுலவாசி தீவில் உள்ள தெற்கு சுலவாசி மாகாணத்திற்கு, இன்று மதியம், 11 பேருடன் சிறிய ரக விமானம் புறப்பட்டுள்ளது.
குறித்த விமானம், தெற்கு சுலவாசி மாகாணத்தின் மரோஸ் நகர் வான்பரப்பில் விமானம் பறந்துக் கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்ட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறித்த விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அல்லது,விமானம் விபத்துக்குள்ளாகி அது முழுவதும் தீப்பற்றி எரிந்து இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அத்துடன், அதில், பயணித்த 11 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
English Summary
A plane carrying 11 passengers has gone missing in Indonesia