The Boys Are Back! கவினுடன் மீண்டும் சாண்டி...! - Kavin 09 ஹைப்!
Boys Are Back Sandy back with Kavin Kavin 09 hype
இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய படத்தில், நடிகர் கவின் மற்றும் நடிகை பிரியங்கா மோகன் முதன்முறையாக ஜோடி சேர்கிறார்கள். ஃபேண்டஸி கலந்த ரொமான்டிக் காமெடி ஜானரிலான இந்தப் படத்திற்கு, இளம் இசையமைப்பாளர் ஓஃப்ரோ (OFRO) இசையமைக்கிறார்.

திங்க் ஸ்டுடியோஸ் பதாகையின் கீழ், தயாரிப்பாளர் ஸ்வரூப் ரெட்டி இந்தப் படத்தை தயாரிக்கிறார். இது நடிகர் கவினின் 9-வது திரைப்படமாக உருவாகி வருகிறது. கவின்–பிரியங்கா மோகன் இணைப்பு அறிவிக்கப்பட்டதும், ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவானது.
இந்த நிலையில், இப்படத்தில் நடன மாஸ்டர் சாண்டி முக்கிய வேடத்தில் கவினுடன் இணைந்திருப்பதாக படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
முன்னதாக, ‘பிக் பாஸ் தமிழ் சீசன் 3’ நிகழ்ச்சியில் தங்களின் நட்பால் ரசிகர்களின் மனதை வென்ற கவின் – சாண்டி ஜோடி, இப்போது திரைமீது மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
படக்குழு வெளியிட்ட வீடியோவில் “The Boys Are Back” என்ற வாசகத்துடன் இந்த இணைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது என்னவெனில், ‘The Boys’ என்ற சொல், இவர்களின் பிக் பாஸ் பயணத்தின் போது சமூக வலைதளங்களில் வைரலான டேக்காக மாறியது.
English Summary
Boys Are Back Sandy back with Kavin Kavin 09 hype