ரெயில் பயணத்தில் புதிய யுகம்: நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயிலை தொடங்கினார் பிரதமர் மோடி...! - Seithipunal
Seithipunal


நாட்டின் ரெயில் பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் வகையில், முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். மேற்கு வங்க மாநிலம் மால்டா நகரில் நடைபெற்ற விழாவில், இந்த அதிநவீன ஸ்லீப்பர் ரெயிலுக்கு பிரதமர் கொடி அசைத்து தொடக்கமளித்தார்.

ஹவ்ரா ரெயில் நிலையத்திலிருந்து அசாம் மாநிலத்தின் கவுகாத்தி காமாக்யா வரை இயக்கப்படும் இந்த ரெயில், கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவை அதிவேகத்தில் இணைக்கும் முக்கிய சேவையாக கருதப்படுகிறது.

958 கிலோமீட்டர் தூரத்தை இந்த ரெயில் 14 மணி நேரத்தில் கடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருந்தாலும், பாதுகாப்பு காரணங்களால் சுமார் 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயிலில்
3-டைர் ஏசி – ரூ.2,299
2-டைர் ஏசி – ரூ.2,970
முதல் ஏசி – ரூ.3,640
என்ற கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (ஜிஎஸ்டி கூடுதலாக வசூலிக்கப்படும்.)மொத்தம் 16 நவீன பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலில், 11 மூன்று-டைர் ஏசி பெட்டிகள், 4 இரண்டு-டைர் ஏசி பெட்டிகள் மற்றும் ஒரு முதல் ஏசி பெட்டி இடம்பெற்றுள்ளன. உயர்ந்த வசதிகள், வேகமான பயணம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன், இந்த ரெயில் சேவை நீண்ட தூர பயணிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

new era train travel Prime Minister Modi launched country first Vande Bharat sleeper train


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->