தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைய வாய்ப்பா...? - எல்.முருகனின் பரபரப்பு பதில்
possibility Vijay joining National Democratic Alliance L Murugan sensational response
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இன்று திருச்சியில் நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,"தமிழகத்தில் ஆட்சியில் உள்ள தி.மு.க. அரசை மாற்ற வேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் ஏற்கனவே வந்துவிட்டார்கள்.
அந்த மாற்றத்தின் தொடக்கமாக தேசிய ஜனநாயக கூட்டணி நடத்தும் பொதுக்கூட்டம் அமையும் என்றார்.பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான திட்டங்களை அறிவித்து வருகிறார்.

தமிழகத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சியே பிரதமரின் முக்கிய இலக்காக உள்ளது. கடந்த மார்ச் 1-ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்திருந்தார். அதேபோல் இன்றும் மேலும் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தமிழகத்திற்கு அர்ப்பணிக்க உள்ளார்.
இதில் ரெயில்வே உள்ளிட்ட பல முக்கிய திட்டங்கள் இடம்பெறுகின்றன.மேலும் கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் ரூ.13 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதனால் பிரதமர் மோடியை அன்புடன் வரவேற்க தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களும், தொண்டர்களும் ஆர்வமாக காத்திருக்கிறோம். இந்த வருகை தி.மு.க. ஆட்சிக்கு முடிவுகட்டும் அரசியல் தொடக்கமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், த.வெ.க. தலைவர் விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவாரா? என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எல். முருகன், “எங்கள் கூட்டணிக்கு அனைவருக்கும் இடமுண்டு; வர விரும்பினால் யாரும் வரலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
possibility Vijay joining National Democratic Alliance L Murugan sensational response