ஆஸ்திரேலியாவில் 2.8 மில்லியன் டாலர் மோசடி; இலங்கையரான அறுவை சிகிச்சை மருத்துவர் உள்பட மூவர் கைது..!
Three people including a Sri Lankan surgeon who committed a Rs 28 00 000 Dollars fraud in Australia have been arrested
ஆஸ்திரேலியாவில் பொது மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த இலங்கையை சேர்ந்த பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் உட்பட மூவர் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
45 வயதான இலங்கை மருத்துவர் திஹான் தரங்க மற்றும் 53 வயதான ரிச்சர்ட் வில்லியம் லாஹெர்டி ஆகிய இருவருமே இந்த ஊழல் மோசடியில் சிக்கியுள்ளனர். குறித்த இருவரும் ஆஸ்திரேலியாவின் பிரபல மருத்துவமனைகளான இளவரசி அலெக்ஸாண்ட்ரா மற்றும் ரோயல் பிரிஸ்பேன் மகளிர் மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள், Medivance எனும் மருத்துவ உபகரண விநியோக நிறுவனத்திடமிருந்து 2.8 மில்லியன் கணக்கான டாலர் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக குறித்த இருவரும் இரகசியமாக பணம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதில் ரிச்சர்ட் லாஹெர்டி என்பவர், உபகரணங்களைப் பயன்படுத்தியதற்காக 20 சதவீத லாபத்தைப் பெற்றதோடு, தனது அறுவை சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் கமரா உபகரணங்களை வாடகைக்கு எடுத்ததாகக் கூறி முறைகேடாகப் பணம் பெற்றுள்ளார். அத்துடன், இந்த முறைகேடுகளை மறைக்க போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து சுகாதார குறைதீர்ப்பாளரை ஏமாற்றியுள்ளமை விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், Medivance நிறுவனத்தின் பணிப்பாளர் எலியட் லாகேஸ், இந்த மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்து, பொது மருத்துவமனைகளின் ஊடாக தனது நிறுவனத்திற்கு மில்லியன் கணக்கான டாலர் வருமானம் ஈட்டியுள்ளார். இதனையடுத்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் ஆஸ்திரேலியா பிரிஸ்பேன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த மூன்று பேரும் நிபந்தனையுடனான பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த இவ்வழக்கின் அடுத்தகட்ட வழக்கு விசாரணை வரும் பெப்ரவரி மாதம் 16 -ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
English Summary
Three people including a Sri Lankan surgeon who committed a Rs 28 00 000 Dollars fraud in Australia have been arrested