ஆட்சி மாற்றத்தால் திட்டங்கள் முடங்காது...தொடரும்...! - முதலமைச்சர் விஜய்யின் முக்கிய அறிவிப்பு...!
change government not stop project they continue Chief Minister Vijay important announcement
முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசின் மீது சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு, தமிழக அரசியலில் கடும் கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வாக மாறியது. ஆளுங்கட்சியின் பெரும்பான்மை பலம், கூட்டணி அரசியலின் நிலை மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் ஆகியவற்றால் அவை முழுவதும் அரசியல் அனல் பறந்தது.

நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்தின் போது, ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் சட்டமன்றக் குழுத் தலைவர்களும் தங்களது நிலைப்பாடுகளை விரிவாக பதிவு செய்து உரையாற்றினர். ஆட்சியின் செயல்பாடு, தேர்தல் வாக்குறுதிகள், கூட்டணி நிலைப்பாடுகள் மற்றும் நிர்வாக அணுகுமுறைகள் குறித்து கடுமையான கருத்து மோதல்கள் அவையில் எதிரொலித்தன.
இந்த விவாதங்களுக்கு நிறைவாக முதல்-அமைச்சர் விஜய் பதிலுரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது,“இந்த அரசு எந்தவித மத அடிப்படையிலான பாகுபாடுகளுக்கும் இடமளிக்காது. முழுமையான மதச்சார்பற்ற ஆட்சியாகவே செயல்படும் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன்.
மக்கள் நலனுக்காக முந்தைய ஆட்சிகள் கொண்டு வந்த பயனுள்ள திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அவை தொடர்ச்சியாக செயல்படுத்தப்படும். அரசியல் காரணங்களுக்காக மக்கள் நலத் திட்டங்கள் முடக்கப்படாது” என்று அவர் தெரிவித்தார்.மேலும், “இந்த அரசு வேகமான நிர்வாகத்தையும் உடனடி செயல்பாடுகளையும் முன்னிலைப்படுத்தும் ஆட்சி.
மக்கள் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காண்பதற்காக குதிரை வேகத்தில் இயங்கும் அரசு இது; அரசியல் பேரம் பேசும் குதிரை சந்தை அரசல்ல” என்று அவர் தெரிவித்தபோது அவையில் பரபரப்பு நிலவியது.
இதனைத் தொடர்ந்து பிரேமலதா எழுந்து, முதல்-அமைச்சரின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் நியமிக்கப்பட்டதன் பின்னணி என்ன? என்ற கேள்வியை முன்வைத்தார்.
இந்த கேள்வி அவையில் கூடுதல் கவனத்தை ஈர்த்தது.அதற்கு பதிலளித்த முதல்-அமைச்சர் விஜய், “அந்த நியமனம் குறித்து மீண்டும் முழுமையாக ஆய்வு செய்து மறுபரிசீலனை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார். முதல்-அமைச்சரின் இந்த பதில் சட்டசபையில் புதிய அரசியல் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
change government not stop project they continue Chief Minister Vijay important announcement