விஜய்யின் தெறி ரீ-ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் தாணு புதிய அப்டேட்..!
Producer Thanu gives a new update regarding the re-release of Vijays Theri
அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான படம் 'தெறி'. இப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையில் தாணு தயாரிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், வசூலிலும் சாதனை படைத்தது. இப்படம் இந்தியிலும் வருண் தவான் நடிப்பில் 'பேபி ஜான்'என்ற பெயரில கடந்த வருடம் ரிலீஸ் ஆனது. இந்நிலையில், தமிழில் தெறி படம் பொங்கலை ஒட்டி ஜனவரி 15 அன்று ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக தயாரிப்பாளர் தாணு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தார்.
விஜய்யின் 'ஜன நாயகன்' படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 09 -ஆம் தேதி, வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அனால், சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டதால் அப்படம் குறித்த தேதியில் வெளியாகாமல், ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.
இதனை அடுத்து, விஜய் ரசிகர்களுக்காக 'தெறி' படம் பொங்கலை ஒட்டி ரீரிலீஸ் வெளியிட திட்டமிடப்பட்டது. இந்த சூழலில் தயாரிப்பாளர் தாணு வெளியிட்ட எக்ஸ் பதிவில், "வரவிருக்கும் படங்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கைக்கு இணங்க , 'தெறி' படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்." என்று அறிவித்தார். இந்நிலையில், தெறி படம் ரீ ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் தாணு இரண்டு அப்டேட்களை கொடுத்துள்ளார்.
அதாவது, தெறி படம் வரும் 23-ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தெறி ரீ-ரிலீஸின் டிரெய்லர் நாளை வெளியாகும் எனவும் தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.
English Summary
Producer Thanu gives a new update regarding the re-release of Vijays Theri