19-ஆம் தேதி நடைபெறவிருந்த தமிழக காங்கிரஸ் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு..!
The Tamil Nadu Congress General Council and Executive Committee meetings have been postponed
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 19-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற இருந்த இந்த கூட்டத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும், மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு சில முக்கிய அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், 19-ஆம் தேதி நடைபெறவிருந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் இருப்பதால் இந்த பொதுக்குழு, செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
English Summary
The Tamil Nadu Congress General Council and Executive Committee meetings have been postponed