தாலிக்கு மதிப்பில்லை... “டியூட்” திரைப்படத்தின் டிரைலர்!
pradeep ranganathan dude movie trailer
இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் “டியூட்” திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கியிருக்கிறார். மலையாள நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் முதல் பாடல் ‘ஊறும் பிளட்’ வெளியானவுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இன்று வெளியான டிரைலரில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ இணையும் காதல் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
“டியூட்” திரைப்படம் தீபாவளி சிறப்பாக வரும் அக்டோபர் 17 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
English Summary
pradeep ranganathan dude movie trailer