காவல் உதவி ஆய்வாளர் பணி நியமனம் அளிக்கப்படுமா? மாணவர்கள் கூட்டமைப்பு கேள்வி!
Will the appointment of the police assistant inspector be granted? A question from the students organization
காவல் உதவி ஆய்வாளர் பணி நியமனம் உறுதியாக எப்போது நடத்தப்படும். 2022 ல் அறிவிக்கப்பட்ட பணி நியமன அறிவிப்பானையை பின்பற்றி விண்ணப்பித்த தேர்வாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? மறுக்கப்படுமா? எனபுதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சீ.சு.சுவாமிநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:புதுச்சேரி மாநிலத்தில் காவல் உதவியாளர் பணி நியமனம் நீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் இருந்தது இத்தகைய சூழலில் கடந்த 2022 ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளர் நியமனத்திற்கான பணி நியமன அறிவிப்பானை வெளியிடப்பட்டு நீண்ட நாட்களாக இப்பணிக்காக காவல் சீறுடை இலட்சியத்தோடு காத்திருந்த பல்வேறு இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர், விண்ணப்பங்களைப் பெற்ற அரசு கடந்த மூன்று ஆண்டு காலமாக அத்தேர்வினை நடத்தாமல் காலதாமதம் செய்து வந்தது இத்தகைய சூழலில் தற்போது மாண்புமிகு உள்துறை அமைச்சர் காவல் உதவியாளர் பணி நியமனத்திற்கான அறிவிப்பாணை விரைவில் வெளியிடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மகிழ்ச்சி அளிக்கிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு நிரப்பப்படும் புதுச்சேரி அரசு பணி நியமனங்களில் வயது தளர்வு கேட்டு தொடர்ச்சியாக தேர்வாளர்கள் பல்வேறு விதமான முயற்சி செய்த போதிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு வயதுத் தளர்வு தர விருப்பமிருந்தும் ஒன்றிய உள்துறை அமைச்சகமும், ஆளுநர் அதிகாரமும், தலைமைச் செயலக அதிகாரமும் இதற்கான அனுமதியை தொடர்ச்சியாக மறுத்து வருகின்றனர். ஆளுநர் அதிகாரம் மற்றும் தலைமைச் செயலகத்தின் அதிகாரத்தை எதிர்த்துப் போராடி இளைஞர்களின் உரிமையை பெறும் வலிமை மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசிடம் இல்லை என்பதை எதிர்கால அரசு பணி நியமன குறைபாடுகள் மூலமாக எமது அமைப்பு நன்கு உணர்கிறது.
காலதாமதமின்றி அறிவித்த அறிவிப்பாணையை முறையான தேதியில் நடத்தி பணி நியமனம் செய்யக்கூட முடியவில்லை என்ற வருத்தம் நீடிக்கிறது. ஒவ்வொரு நாளும் பல இளைஞர்களின் கனவை சீரழிப்பதை அரசு உணருமா என்ற கேள்வி எழுகிறது.
மேலும், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி ஒரு பணி நியமனத்திற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டு அது நடத்தப்படாமல் இருந்தால் மறுமுறை புதிய அறிவிப்பானை அறிவிக்கும் போது முந்தைய அறிவிப்பாணையில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று முந்தைய வழக்குகளில் உச்சநீதிமன்றம் வழிகாட்டி உள்ளது , புதுச்சேரி அரசு 2022-ல் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு காவல் உதவியாளர் பணி நியமனத்தில் பங்குபெற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் பாடமுறையில் ஒவ்வொரு பாடப்பிரிவுக்கான மதிப்பெண்களை தனித்தனியாக பிரித்து வெளியிட வேண்டும் என்ற தேர்வாளர்களின் கோரிக்கையை தொடர்ந்து அரசு பணி நியமனங்களில் புதுச்சேரி அரசு புறக்கணித்து வருவது கண்டனத்திற்குரியது இத்தகைய தேர்வு முறை எந்த ஒரு மாநிலத்திலும் பின்பற்றப்படவில்லை என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம். அரசு பணி நியமன தேர்வு குழுவின் தகுதியற்ற நிலையே இதற்கு காரணம் என பலமுறை அரசிடம் சுட்டிக்காட்டி உள்ளோம் ஆனால் அதிகார வர்க்கத்தை தட்டிக் கேட்க தைரியம் இல்லாத புதுச்சேரி மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு புகார்களின் மீது விசாரணை கூட நடத்த முடியாமல் தலை குனிந்து நிற்பதை எங்களால் உணர முடிகிறது
சம வாய்ப்பு சம தேர்வு முறையே புதுச்சேரி மாநில அரசு பணி நியமனங்களில் திறமையானவர்களை உருவாக்கித் தரும் என எமது அமைப்பு நம்புகிறது ஆளுங்கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் தங்களது காரியம் நடந்தால் போதும் என கைகட்டி வாய்மூடி இருக்கக்கூடிய சூழ்நிலையால் இன்று அதிகார வர்க்கம் புதுச்சேரி மாநிலத்தை ஆட்டிப்படைக்கிறது என்ற கண்டனத்தை பதிவு செய்கிறோம்.
அரசு பணி நியமனங்களில் ஆளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மாநில இளைஞர்களின் மனசாட்சியாக செயல்பட வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறோம்.
உரிய தீர்வை விரைவில் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்எனபுதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சீ.சு.சுவாமிநாதன்கூறியுள்ளார்.
English Summary
Will the appointment of the police assistant inspector be granted? A question from the students organization