தேசிய விருது பெற்ற பாடகர் மற்றும் நடிகர் விவாகரத்து: 17 வருட திருமண வாழ்க்கை முற்றுப்பெற்றாலும், மகளுக்காக இணைந்திருப்போம் என பதிவு: ரசிகர்கள் அதிர்ச்சி..! - Seithipunal
Seithipunal


தேசிய விருது பெற்ற பிரபல மராத்தி திரையுலகின் முன்னணி பாடகரும், நடிகருமான ராகுல் தேஷ்பாண்டே, தனது 17 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தங்களின் திருமண வாழ்வின்  சட்டப்பூர்வமான பிரிவு, கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே சுமுகமாக முடிவடைந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து அவர் இன்ஸ்டா பதிவில் கூறியுள்ளதாவது:

'17 ஆண்டுகால திருமண வாழ்க்கை மற்றும் எண்ணற்ற பசுமையான நினைவுகளுக்குப் பிறகு, நானும் நேஹாவும் பரஸ்பரம் பிரிந்து, தனித்தனியாக வாழ முடிவு செய்துள்ளோம். இந்த மாற்றத்தை மனதளவில் ஏற்றுக்கொள்வதற்கும், அனைத்தையும் சரியாகக் கையாள்வதற்கும் சிறிது காலம் எடுத்துக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன்,அவர்களின் மகள் ரேணுகாவை இருவரும் இணைந்து வளர்ப்பதே எங்களின் தலையாய கடமை என்றும், மகளுக்கு நிலையான மற்றும் அன்பான ஆதரவை வழங்குவதற்காக, அவரும் நேஹாவும் பெற்றோர்களாக இணைந்து செயல்படுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனிநபர்களாக அவர்கள் இருவரும் பிரிந்தாலும், பெற்றோர்களாக எங்கள் பிணைப்பும், ஒருவருக்கொருவர் நாங்கள் வைத்திருக்கும் மரியாதையும் எப்போதும் வலுவாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்த நேரத்தில் அவர்களின் தனிப்பட்ட முடிவுக்கு மதிப்பளித்து, அனைவரும் தங்களை புரிந்துகொள்வார்கள் என நம்புவதற்காக பதிவிட்டுள்ளார்.

ராகுல் தேஷ்பாண்டே, 'மீ வசந்த்ராவ்' என்ற மராத்தித் திரைப்படத்திற்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றவர். மறைந்த புகழ்பெற்ற பாரம்பரிய இசைக்கலைஞர் வசந்த்ராவ் தேஷ்பாண்டேவின் பேரன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

National Award winning singer and actor Rahul Deshpande divorces


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->