தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா போட்ட அதிரடி உத்தரவு!
TN BJP Amitshah Order election work
டெல்லியில் நடைபெற்ற தமிழக பாஜக உயர்மட்டக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கி ஆலோசனை நடத்தினார். இதில் கூட்டணியை வலுப்படுத்துவது, வரவிருக்கும் தேர்தலுக்கான முன்னேற்பாடு மற்றும் புதிய கட்சிகளை இணைக்கும் வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த நேரத்தில், தமிழக பாஜக நிர்வாகிகளிடையே நிலவும் உட்கட்சி பூசல்கள் குறித்து அமித் ஷா கவலை வெளியிட்டார். நயினார் நாகேந்திரன், எல். முருகன், பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு, உட்கட்சி பிரச்சினைகளை மறந்து ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
அவர் மேலும் கூறுகையில், "கருத்து வேறுபாடுகள் மற்றும் உள்கட்சி பூசல்கள் கட்சியின் வளர்ச்சிக்கே தடையாக இருக்கும். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த உள்கட்சி பிரச்சினைகளை தவிர்ப்பது மிகவும் அவசியம். ஒன்றுபட்டு செயல்படுவது தான் கட்சியின் முன்னேற்றத்திற்கும் தேர்தல் வெற்றிக்கும் வழிவகுக்கும்" என்றார்.
இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
English Summary
TN BJP Amitshah Order election work