சாலை விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற பிரபல மலையாள நடிகர் அதிரடி கைது..! - Seithipunal
Seithipunal


பிரபல மலையாள நடிகர் மணியன்பிள்ளை ராஜு, விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றையதினம் திருவனந்தபுரத்தில் மணியன்பிள்ளை ராஜு ஓட்டிச் சென்ற கார், இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், விபத்து நடந்தவுடன் வாகனத்தை நிறுத்தாமல் மணியன்பிள்ளை ராஜு சென்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், விபத்தை ஏற்படுத்தியது மற்றும் விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். விபத்து நடந்த போது அவர் மது போதையில் இருந்தாரா என்பதை கண்டறிய மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Popular Malayalam actor arrested in a dramatic operation after causing a road accident and fleeing the scene


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->