U19 உலகக் கோப்பை: வைபவ் சூரியவன்ஷி அதிரடி; இங்கிலாந்தை 100 ரன்களில் வீழ்த்தி, 06-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா..!
India defeated England in the U19 World Cup to win the championship title for the 6th time
19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நடைபெற்றது. இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. போட்டியில், டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, தொடக்க வீரர்களாக ஆரோன் ஜார்ஜ், வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் களம் இறங்கினர். இதில், ஜார்ஜ் 11 பந்தில் 09 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். அடுத்ததாக, வைபவ் சூர்யவன்ஷி உடன் ஆயுஷ் மாத்ரே ஜோடி சேர்ந்தார். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியில் ஆயுஷ் மாத்ரே 50 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 51 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சூர்யவன்ஷியுடன் வேதாந்த் திரிவேதி ஜோடி சேர்ந்தனர்.

இதில் ஆபரமாக ஆடிய, வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் 15 பவுண்டரிகள், 15 சிக்சர்கள் அடங்களாக அசத்தியுள்ளார். அதன் பின் வந்த வேதாந்த் திரிவேதி 36 பந்தில் 32 ரன்களும், விஹான் மல்கோத்ரா 36 பந்தில் 30 ரன்களும், அபிக்யான் கந்து 31 பந்தில் 40 ரன்களும் எடுத்தனர்.
கனிஷ்க் சவுகான் ஆட்டமிழக்கால் 20 பந்தில் 37 ரன்கள் சேர்க்க இந்தியா 50 ஓவரில் 09 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் என்ற இமாலய இலக்கை குவித்தது. பின்னர் 412 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இக்குடன் இங்கிலாந்து அணி, களமிறங்கியது.

தொடக்க வீரர் பென் டாவ்கின்ஸ் 56 பந்தில் 66 ரன்கள் சேர்த்தார். பென் மேய்ஸ் 28 பந்தில் 45 ரன்கள் எடுத்தார். அதன்பின் சீரான இடைவெளியில் இங்கிலாந்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதிவரை தனிஆளாகி ஆடிய, கலெப் பால்கனர் அபாரமாக விளையாடி 67 பந்தில் 115 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து 40.2 ஓவரில் 311 ரன்கள் எடுத்து சகல விக்கெட்டுகளை இழந்தது.
இதன்காரணமாக இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்திய அணியில் தமிழாண்டு வீரர்கள் அம்ப்ரிஸ் 03 விக்கெட்டும் தேவேந்திரன் 02 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கனிஷ்க் சவுகான் 02 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த இந்த வெற்றியின் மூலம் இந்தியா 06-வது முறையாக இளையோர் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
English Summary
India defeated England in the U19 World Cup to win the championship title for the 6th time