இந்தியாவில் ஐபோன் 17e மாடல் புது ஐபோன் விரைவில்; முழு விவரங்கள் உள்ளே..!
India to get a new iPhone 17e model soon
ஆப்பிள் நிறுவனம் விரைவில் புதிய ஐபோன் மாடலை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 16e மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் எனவும், இந்த மாடல் ஐபோன் 17e என்ற பெயரில் விற்பனைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.
இது முந்தைய மாடலைப் போலவே ஒட்டுமொத்தமாக அதே வடிவமைப்பை கொண்டிருக்கும் என்று கூறப்படும் நிலையில், இதில் டைனமிக் ஐலேண்ட் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால், புதிய சாதனத்திலிருந்து பழைய பாரம்பரிய நாட்ச் அகற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 16e மாடலை பிப்ரவரி 19, 2025 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அடுத்த புதிய ஐபோன் 17e மாடலும் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்த புதிய ஐபோனின் கேமரா, கடந்த ஆண்டு ஐபோன் 16e-யில் இருந்த அதே ஒற்றைக் கேமரா அமைப்பே இந்த மாடலிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது ஆப்பிள் இப்போது மாற்றக்கூடிய ஒரு விஷயமாகும். வழக்கமான ஐபோன் 17-இல் 120Hz ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன் உள்ளது. ஆனால், இதை ஸ்கிரீன் ஐபோன் 17e மாடலிலும் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவும் உள்ளது.
புதிய ஐபோன் 17e மாடலில் புதிய A19 சிப்செட் வழங்கப்படலாம் என்றும், ஐபோன் 16e மாடலில் A18 சிப்செட் உள்ளது. இது ஐபோன் 16 சீரிசில் வழங்கப்பட்டு சிப்செட் ஆகும். அத்தோடு, ஐபோன் 17e மாடலில் புதிய C1X மோடமும் இடம் பெறும். முந்தைய ஐபோன் 16e மாடலில் தான் C1 5ஜி மோடம் முதல் முறையாக வழங்கப்பட்டது.
English Summary
India to get a new iPhone 17e model soon