'தேசியப் பாதுகாப்பு குறித்து ராகுல் காந்தியிடமிருந்து எங்களுக்குத் பாடங்கள் தேவையில்லை'; அனுராக் தாகூர் தாக்கு..!
Anurag Thakur says we do not need lessons from Rahul Gandhi regarding national security
முன்னாள் அமைச்சரும், பாஜக எம்.பி.யுமான அனுராக் தாகூர், மோடி அரசுக்கு தேசிய பாதுகாப்பு குறித்து ராகுல் காந்தி பாடம் கற்பிக்க தேவையில்லை எனகே குறிப்பிட்டுள்ளார்.
டோக்லாம் மோதல் மற்றும் இந்தியா- சீனா கொள்கை குறித்து மக்களவையில் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இது குறித்த அனுராக் தாகூரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது;
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் இந்திய நிலங்கள் சீனாவுக்கு தாரைவார்க்கப்பட்டன என்றும், அதற்குப் பதிலாக ராஜிவ் காந்தி பவுண்டேசன் பணத்தை பெற்றது என்று சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், சீனாவிடம் நிலத்தை இழந்த போது ஆட்சியில் இருந்த அதே மக்கள் தற்போது எங்களிடம் கேள்வி கேட்கிறார்களா..? என்று கூறியதோடு, இந்திய அரசியலில் இதைவிடப் பெரிய துரதிர்ஷ்டம் வேறு என்ன இருக்க முடியும்..? என்று பேசியுள்ளார்.
கடந்த 60 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த கட்சியும் அதன் குடும்பமும் அதிகாரத்தின் பலன்களை அனுபவித்த போதிலும், அதன் அரசாங்கங்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நிலத்தை சீனாவிடம் இழந்தன என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
அத்துடன், பாகிஸ்தானிடமிருந்து நமது உரிமைகளை மீட்டெடுக்க முடியாதவர்கள், இப்போது பொய்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தைக் கேள்வி கேட்கிறார்கள் என்று காங்கிரஸினரை விமர்சித்துள்ளதோடு, ராகுல் காந்தியிடமிருந்து எங்களுக்குத் தேசியப் பாதுகாப்பு குறித்த பாடங்கள் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Anurag Thakur says we do not need lessons from Rahul Gandhi regarding national security