மனு அளிக்க வந்த முதியவரை நெஞ்சில் குத்திய திமுக அரசின் காவல்துறை! அதிர்ச்சி வீடியோ!
AIADMK Viral video police si attack public ungaludan stalin
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், மனு அளிக்க வந்த முதியவர் வெங்கடாபதி மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தகவலின்படி, முதியவர் வெங்கடாபதி தனது பிரச்சினையை தெரிவித்து மனு அளித்துள்ளார். அதற்கான சான்றாக ரசீது வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் முதலில் அங்கு இருந்த வி.ஏ.ஓ. ஷாபுதீன் அவரை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் கோபமடைந்த வெங்கடாபதி, அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த நேரத்தில் அங்கு பணியாற்றிய போலீஸ் எஸ்.ஐ., வெங்கடாபதியை நெஞ்சில் ஓங்கி குத்தி, வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் கடும் கண்டனம் தெரிவிக்க, முகாமில் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். தற்போது, முதியவர் மீதான தாக்குதல் தொடர்பாக போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
இதுகுறித்த அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மனு அளிக்க வந்த முதியவரை நெஞ்சில் குத்திய திமுக அரசின் காவல்துறை!
இது தான் "உங்களுடன் ஸ்டாலினா?
மக்கள் மனு தீர்க்கும் முகாமா?
அல்லது, மனு கொடுக்க வரும் மக்களை முடக்கும் முகாமா?
இந்த பாசிச ஆட்சி வீழும். அதை 2026-ல் இபிஎஸ் தலைமையிலான அதிமுக உறுதி செய்யும்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
AIADMK Viral video police si attack public ungaludan stalin