எரிவாயு தட்டுப்பாடு; வீட்டு உபயோக சிலிண்டர் புக் செய்வதில் புதிய கட்டுப்பாடு விதித்துள்ள மத்திய அரசு..! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல்-ஈரான் இடையே நிகழும் போர் சூழல் காரணமாக உலாகி நாடுகளில் எரிவாயு தட்டு ஏற்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை 60 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம், சென்னையில் இதுவரை 869 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த சிலிண்டர், தற்போது 929 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை 115 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ஒரு வணிக சிலிண்டரின் விலை 2,044 ரூபாயாகவும், டெல்லியில் 1,883 ரூபாயாகவும், மும்பையில் 1,835 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில், பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக சிலிண்டர்களை வாங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முன்னதாக 55 நாட்களில் LPG சிலிண்டர்களை முன்பதிவு செய்தவர்கள் 15 நாட்களில் LPG சிலிண்டர்களை முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளதாக அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், செயற்கையாக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்ட வாய்ப்புள்ளது. முன்பதிவிற்கு எண்ணெய் நிறுவனங்கள் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தன. அதன்படி, ஒரு சிலிண்டர் வாங்கிய பிறகு மற்றொரு சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கு 21 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது இந்த கால அவகாசத்தை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு தரப்பில் இருந்து வெளியாகியுள்ள தகவலின்படி, பதுக்கல் மற்றும் கறுப்புச் சந்தை விற்பனையைத் தடுக்க, LPG முன்பதிவு காலம் 21-லிருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், LPG உற்பத்தியை அதிகரிக்க சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், வணிக பயன்பாட்டைவிட வீட்டு உபயோக LPG-க்கு முன்னுரிமை அளிக்கவும் அரசு உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Central government imposes new restrictions on booking of domestic cylinders


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->