விடுதி சுவற்றில் ஜெய்பீம் வாசகம்! மாணவர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை - நீதிமன்றம் போட்ட அதிரடி தடை! - Seithipunal
Seithipunal



ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் மூன்று மாணவர்களை சஸ்பெண்ட் செய்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அஸ்லம், சயீத், நஹல், இப்னு ஆகியோர் அந்த நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தனர். விடுதி சுவர்களில் ஜெய் பீம் என்று எழுதியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால், நிர்வாகம் மூவரையும் இடைநீக்கம் செய்தது.

இந்த நடவடிக்கையை எதிர்த்து மாணவர்கள் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, மாணவர்களை இடைநீக்கம் செய்தது உள்நோக்கம் கொண்ட முடிவாக இருந்ததாகவும், அவர்களின் கல்வி உரிமையை பாதிக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.

இருதரப்பின் வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம், மாணவர்களின் நடத்தையில் குறைபாடு இருந்தாலும் சூழ்நிலைகளை கருதி கடுமையான தண்டனை அவசியமில்லை என்று குறிப்பிட்டது. மேலும், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதையும் சுட்டிக்காட்டியது.

இதனையடுத்து, மாணவர்களை சஸ்பெண்ட் செய்த உத்தரவை ரத்து செய்து, அவர்கள் கல்வி தடையின்றி தொடர நீதிமன்றம் உத்தரவிட்டது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai highcourt jai bhim student Suspend


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->