இரவும் பகலும் வேலை செய்தேன்… ஆனால் வாழ்க்கை கையில் இருந்தே கரைந்துவிட்டது...!-ஏ.ஆர்.ரகுமான் வார்த்தைகள் வைரல் - Seithipunal
Seithipunal


சுமார் 33 ஆண்டுகளாக இந்திய திரையுலகில் தனது இசையால் மக்களை கவர்ந்து வரும் ஏ.ஆர். ரகுமான், இன்னும் இன்றைய இளைய தலைமுறையினரால் கூட "MUSIC GOD" என்று போற்றப்படுகிறார். இவர் அண்மையில் இசையமைத்த ‘ஆடுஜீவிதம்’, ‘மைதான்’ போன்ற படங்களுக்காக உலகத் தரத்தில் இசையமைத்து சர்வதேச அளவிலும் பாராட்டுகளை பெற்றுள்ளார்.

இருப்பினும், சில மாதங்களுக்கு முன், அவருடைய மனைவி 'சாயிரா பானு' விவாகரத்து கோரிக்கை வைத்ததாக வந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த 1995-ம் ஆண்டு திருமணமான இந்த தம்பதிக்கு, 1 மகனும் 2 மகள்களும் உள்ளனர். ஆனால் இந்த விவகாரம் குறித்து ரகுமான் எந்த விதமான பதிலும் அளிக்காமல் அமைதியாக இருந்தார்.இந்நிலையில், அண்மையில் ஒரு நேர்காணலில் ரகுமான் தனது வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஏ.ஆர். ரகுமான்:

அப்போது,“சில நேரங்களில் நாம் நிறைய திட்டங்களை தீட்டுகிறோம், ஆனால் அது ரத்தாகிவிடுகிறது. நான் தண்ணீரைப் போல, காலத்தின் ஓட்டத்தில் செல்கிறேன். வேலையிலும் அப்படித்தான்.

முன்பு, நான் ஒரு வெறி பிடித்தவன் போல, இரவும் பகலும் வேலை செய்தேன். அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்.

இப்போது நான் தனிப்பட்ட வாழ்க்கையை அனுபவிக்கவும், குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் நான் வேலைப்பளுவை குறைத்துக் கொண்டிருக்கிறேன்” என்று ரகுமான் மனம் திறந்து பேசியுள்ளார். இந்த கூற்று, அவரின் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I worked day and night but life has slipped away from my hands AR Rahmans words go viral


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->