விஜய் குறித்து நயினார் சர்ச்சை விமர்சனம்: 'அவர் பெண்களை இழிவுபடுத்தமாட்டார்'...! - நயினாருக்கு சாதகமாக பேசிய தமிழிசை
Nainar controversial criticism Vijay He not humiliate women Tamilisai spoke favor Nainar
சேலம் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் ஆலோசனைச் சந்திப்பு சீலநாயக்கன்பட்டி நெடுஞ்சாலையில் இருக்கும் தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.
இந்தக் கூட்டம் அரசியல் பரபரப்புடன் நடந்துகொண்டிருக்கையில், நடிகர்-அரசியல்வாதி விஜய் தெரிவித்திருந்த கருத்துகள் குறித்து பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர்,"பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். பிறகு திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால் தான் எல்லாமே நடத்த முடியும் என கடுமையாக விமர்சித்தார்.
இந்த பேச்சு உடனே சர்ச்சையை கிளப்பி, பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்களை தூண்டியது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், “நயினார் பொதுவாக மிக பண்பாகப் பேசுபவர்; இந்த கருத்து சற்று வருத்தமளிக்கிறது” என மிதமான பதிலை பதிவு செய்தார்.
அதேபோல், கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “நயினார் பெண்களை மதிக்கும் நபர்; யாரையும் புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை. அவரது கருத்தை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம்” என விளக்கம் அளித்து, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களையும் நிராகரித்தார்.
ஒரு பேச்சு அரசியல் அரங்கில் பல்வேறு எதிர்வினைகளை கிளப்பி, சேலம் கூட்டத்தை சர்ச்சையின் மையமாக மாற்றியுள்ளது.
English Summary
Nainar controversial criticism Vijay He not humiliate women Tamilisai spoke favor Nainar