100 கோடி ஓடிடி ஆஃபருக்கு ‘நோ’ சொன்ன ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா ஜோடி? பின்னணி என்ன?
Rashmika Vijay Deverakonda pair said no to 100 crore OTT offer What is the background
பிரபலங்களின் திருமண வீடியோக்களை ஓடிடி தளங்கள் கோடிக்கணக்கில் வாங்கி வெளியிடுவது சமீப காலங்களில் புதிய டிரெண்டாக மாறியுள்ளது. இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா திருமண வீடியோ உரிமைக்காக வந்ததாக கூறப்படும் 100 கோடி ரூபாய் ஆஃபரை நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் பிப்ரவரி 26ஆம் தேதி ராஜஸ்தானின் உதய்பூர் அரண்மனையில் இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. திருமணத்தை ஸ்ட்ரீம் செய்யும் உரிமைக்காக பல ஓடிடி நிறுவனங்கள் போட்டியிட்டதாகவும், அவற்றில் ஒன்று 100 கோடி ரூபாய் வரை வழங்க முன்வந்ததாகவும் தகவல் பரவியுள்ளது.
இதற்கு முன், நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண வீடியோ உரிமையை நெட்ஃபிளிக்ஸ் சுமார் 25 கோடி ரூபாய்க்கு பெற்றது. ‘நயன்தாரா: பியாண்ட்தி ஃபேரி டேல்’ என்ற பெயரில் ஆவணப்படமாக வெளியானது. திருமணத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்தே அது வெளியானது குறிப்பிடத்தக்கது. இதேபோல், நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோவும் ‘ஹன்சிகாஸ் லவ் ஷாதி டிராமா’ என்ற பெயரில் ஹாட்ஸ்டாரில் வெளியானது.
அதே சமயம், நாக சைதன்யா – சோபிதா ஜோடி திருமண வீடியோவிற்காக வந்ததாக கூறப்படும் 50 கோடி ரூபாய் ஆஃபரை நிராகரித்ததாகவும் செய்திகள் வெளியானது. தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் பகிர விரும்பாததே அதன் காரணம் என கூறப்பட்டது.
அந்த வரிசையில் தற்போது ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா ஜோடியும் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கள் திருமணத்தை குடும்பத்தினர் மற்றும் நெருங்கியவர்களுடன் தனிப்பட்ட முறையில் நடத்த விரும்புவதால், ஓடிடி ஆஃபரை ஏற்கவில்லை என கூறப்படுகிறது.
இருவரின் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், சமூக வலைதளங்களில் இந்த தகவல்கள் வைரலாக பரவி வருகின்றன. திருமண தேதி நெருங்கி வரும் சூழலில், ரசிகர்கள் தரப்பில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
English Summary
Rashmika Vijay Deverakonda pair said no to 100 crore OTT offer What is the background