விஜய் ரசிகர்களுக்கு ஷாக்…‘ஜன நாயகன்’ ஏப்ரல் இறுதி வரை வெளியாக சாத்தியம் இல்லை...! - Seithipunal
Seithipunal


ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் முன்னணி கதாபாத்திரத்தில், பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜு இணைந்து நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம், பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இது விஜய்யின் ‘கடைசி படம்’ என்ற பேச்சு பரவியதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தைக் கடந்தது.

ஆனால், தணிக்கை சான்றிதழ் தொடர்பான சிக்கல்கள் பட வெளியீட்டுக்கு தடையாக மாறின. தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தாலும், பின்னர் வழக்கை வாபஸ் பெற்று, படத்தை மறுதணிக்கைக்காக மீண்டும் அனுப்பியது.

இதனால் வெளியீட்டு தேதி குழப்பத்தில் சிக்கியது.இதற்கிடையில், கனடாவில் படத்தை வெளியிட இருந்த York Cinemas, ஏப்ரல் 30ஆம் தேதி வரை படம் வெளியாக வாய்ப்பு இல்லை என அறிவித்து, முன்பதிவு செய்த ரசிகர்கள் டிக்கெட் தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

பெரும் கொண்டாட்டத்துக்குத் தயாரான ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தி, ‘ஜன நாயகன்’ ரிலீஸ் எப்போது என்ற கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்படுகிறது.

விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல, தமிழ் திரையுலகமே அடுத்த அப்டேட்க்காக  ஆவலுடன் காத்திருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shock Vijay fans Jananayakan unlikely release until end April


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->