மிலாது நபி அன்று ஜிப்மர் மருத்துவமனை புற நோயாளி பிரிவுகள் இயங்காது!
Jipmer Puducherry OP Leave
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, மிலாது நபி தினமான செப்டம்பர் 5 (வெள்ளிக்கிழமை) அன்று வெளிப்புற நோயாளி பிரிவுகள் இயங்காது என்று அறிவித்துள்ளது.
இந்த நாளில் மத்திய அரசு விடுமுறை என்பதால், நோயாளிகள் அந்நாளில் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்றும் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆனால், அவசரப் பிரிவு சேவைகள் வழக்கம்போல முழுமையாக செயல்படும் என்றும், உடனடி சிகிச்சை தேவையான நோயாளிகள் எந்த தயக்கமும் இல்லாமல் அவசரப் பிரிவை அணுகலாம் என்றும் விளக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், "05.09.2025 அன்று மிலாதுநபி தினத்தையொட்டி வெளிப்புற நோயாளி சேவைகள் மூடப்படும். ஆனால் அவசர சிகிச்சை பிரிவுகள் வழக்கம்போல இயங்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Jipmer Puducherry OP Leave