நேரு வாழ்ந்த பங்களா ரூ 1,100 கோடி... அது எப்படி நீங்க சொல்லலலாம்! மத்திய அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விடுத்துள்ள கண்டன செய்தியில், "இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் வாழ்ந்த வரலாற்றுப் பெருமை மிக்க பங்களாவை ரூபாய் 1,100 கோடிக்கு வணிகச் சொத்தாக அவமதிக்கப்பட்டு இருப்பது இந்தியா என்ற தேசத்தின் ஆன்மாவையே புண்படுத்திய செய்தியாகும். ஒன்றிய அரசின் இச்செயலுக்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

அந்த இல்லம் வெறும் ஒரு கட்டிடம் அல்ல. அது சுதந்திரப் போராட்டத்தின் சுவாசம், அது ஜனநாயகத்தின் தாலாட்டு, அது இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைத்த தீர்மானங்களின் சாட்சியம். அந்த புனித தளத்தை அரசாங்கம் காக்க வேண்டிய வேளையில், மோடி அரசு அதை பணம் சம்பாதிக்கும் கருவியாக மாற்றி விட்டது. இது ஒரு அரசின் தவறு அல்ல, இது வரலாற்றையே கொலை செய்யும் செயல்.

நேருவின் பெயரை அழிக்க நினைக்கும் மோடி அரசு, இன்று அவரின் இல்லத்தையும் அழிக்க முனைந்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தின் மரபை விற்கத் தயங்காத இந்த அரசு, இந்தியாவின் வரலாற்றை சந்தையில் வைத்து விற்பனை செய்யும் நிலையில்தான் தள்ளப்பட்டுள்ளது. இது ஒரு அவமானம் மட்டுமல்ல, இது சுதந்திர இந்தியாவின் அடையாளத்திற்கு நேரடியாக விடுக்கப்பட்ட சவால்.

இந்திய மக்கள் இந்த அவமதிப்பை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். நேருவின் இல்லம் அவமதிக்கப்பட்டு இருப்பது வெறும் சொத்து விற்பனை அல்ல, அது நமது சுதந்திர வரலாற்றை பாழாக்கும் அரசியலாகும். அந்த இல்லம் உடனடியாக தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட வேண்டும். மக்களுக்காக அது பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்தியாவின் ஆன்மாவையே விற்கும் மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி மக்கள் குரலாக எழும். தெருவிலிருந்து சபைக்கு வரை எங்கும் இந்த துரோக அரசுக்கு எதிராக எங்கள் போராட்டம் தொடர்ந்து கொந்தளிக்கும். வரலாற்றை விற்க நினைப்பவர்கள், வரலாற்றின் குப்பைத்தொட்டியில்தான் வீசப்படுவார்கள் என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்துவோம்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

congress selvaperunthgai central govt nehru


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->