பிக்பாஸ் 9 புரோமோ! ஹைப் ஏற்படுத்திய விஜய் டிவி! வெளியான போட்டியாளர்கள் பட்டியல்! யார் யார் தெரியுமா?
Bigg Boss 9 promo Vijay TV created the hype Contestants list released Do you know who is who
விஜய் டிவியின் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் தமிழ் தனது 9-வது சீசனுக்கான புரோமோவை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு, ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஏற்கனவே, சீசன் 9 அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் என தகவல் வெளியான நிலையில், தற்போது விஜய் சேதுபதி இடம்பெற்றுள்ள புரோமோ வீடியோவை வெளியிட்டு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி உறுதி செய்துள்ளது. புரோமோவில், விஜய் சேதுபதி சேரில் அமர்ந்து திரும்பும் காட்சி இடம்பெற்றுள்ளது.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொடக்கத்தில் கமல் ஹாசன் தொடர்ந்து 7 சீசன்கள் தொகுத்து வழங்கினார். ஆனால், 8-வது சீசனில் முதல் முறையாக நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக அறிமுகமானார். ஆரம்பத்தில் விமர்சனங்களை சந்தித்தாலும், காலப்போக்கில் ரசிகர்களின் மனதை வென்று, வெற்றிகரமாக நிகழ்ச்சியை நடத்தினார்.
சீசன் 8-இல் முத்துக்குமரன் டைட்டில் வென்றார். சௌந்தர்யா நஞ்சுண்டன் இரண்டாவது இடத்தை பிடித்தார். இறுதிப் போட்டி நிகழ்ச்சி 10.50 ரேட்டிங் பெற்றது. தொடக்க விழாவும் 9 புள்ளிகள் ரேட்டிங் பெற்றிருந்தது.
இந்த ஆண்டுக்கான பிக் பாஸ் சீசனில், விஜய் டிவி பிரபலங்களே அதிக அளவில் கலந்துகொள்ளவுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக அறிமுகமான ஷபானா மற்றும் உமைர் – பிக் பாஸ் வீடு நுழைவதற்கான வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படுகிறது.
விஜய் டிவி சீரியல்களில் நடித்தவர்கள்:
தென்றல் வந்து என்னை தொடு சீரியல் நடிகர் வினோத் பாபு,மிஸ்டர் & மிஸ்சஸ் சின்னத்திரை மூலம் பிரபலமான நடிகர் புவி அரசு,பாக்கியலட்சுமி சீரியல் நடிகைகள் நேஹா மேனன் மற்றும் அக்ஷிதா அசோக்
திரைப்பட மற்றும் சமூக ஊடக பிரபலங்கள்:
காமெடியன் பால சரவணன்,இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சரும் பிரபல விஜேயுமான பார்வதி,நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன்,நடிகை அம்ருதா ஸ்ரீனிவாசன்
இவ்வளவு பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிலையில், சீசன் 9 மிகப்பெரிய அதிரடி போட்டிகளுக்கு அரங்கமாக மாறும் என ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்து வருகின்றனர். மேலும், விரைவில் முழுமையான டீசர் வெளியாகும் எனவும் விஜய் டிவி அறிவித்துள்ளது.
English Summary
Bigg Boss 9 promo Vijay TV created the hype Contestants list released Do you know who is who