பாகுபலி பின் அடுத்த அதிரடி...! ராஜமௌலி -மகேஷ் பாபு படத்தின் பட்ஜெட் ரகசியம் வெளியானது...! - Seithipunal
Seithipunal


பிரமாண்ட இயக்குனராக தெலுங்கு சினிமாவில் வலம் வருபவர் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' 2 பாகங்களும் வசூலில் 1000 கோடிகளை தாண்டியது. அதும்மட்டுமின்றி,இப்படம் சுமார் 500 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்டது.

தற்போது ராஜமௌலி முன்னணி நடிகரான மகேஷ் பாபுவை வைத்து புதிய படம் இயக்கி வருகிறார். இப்படம் SSMB29 என அழைக்கப்பட்டு வருகிறது. மேலும், பிரமாண்ட இயக்குனர் மற்றும் முன்னணி கதாநாயகன் சேர்ந்துள்ளதால், படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டிருக்கின்றது.

இதனிடையே,இப்படம் சுமார் ரூ.1200 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும், இது இரண்டு பாகமாக எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.மேலும்,120 நாடுகளில் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மேலும், படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற நவம்பர் மாதம் வெளியாகும் என ராஜமௌலி தெரிவித்திருந்தார்.மேலும்,இப்படத்தில் பிரித்விராஜ் சுகுமார்,பிரியங்கா சோப்ரா மற்றும் பல முன்னணி நகடிர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தை துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஆஸ்கார் விருது வென்ற எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்.ஆகையால் இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

next action after Baahubali budget secret Rajamouli Mahesh Babus film has been revealed


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->