வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனம் இழுத்து மூடல்! - Seithipunal
Seithipunal


பிரபல இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ள புதிய படம் Bad Girl செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை வெற்றிமாறனின் முன்னாள் உதவி இயக்குநரான வர்ஷா பரத் இயக்கியுள்ளார்.

கதாநாயகியாக அஞ்சலி சிவராமன் நடிக்க, அவருடன் சாந்திப்ரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷாங்க் பொம்மிரெட்டிபல்லி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை அமித் த்ரிவேடி அமைத்துள்ளார்.

Bad Girl ஒரு டீனேஜ் பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதை. வளர்ந்து வரும் வயதில் அவள் சந்திக்கும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் மற்றும் அவற்றின் வழியாக உலகைப் பார்க்கும் பார்வை, அனுபவங்கள் ஆகியவை படம் முழுவதும் பேசப்படுகிறது. இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் வெற்றிமாறன் தனது தயாரிப்பு நிறுவனமான கிராஸ் ரூட் பிலிம்ஸ் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

அவர் கூறியதாவது: “தயாரிப்பாளராக இருப்பது மிகப்பெரிய பொறுப்பு. இயக்குநரின் வேலை அதை ஒப்பிடும்போது மிகவும் எளிமையானது. தயாரிப்பாளரின் பணி கடினமானதும் சவாலானதுமாக உள்ளது. எனவே, Bad Girl தான் நான் தயாரிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும். இதன் பிறகு கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனம் மூடப்படுகிறது” என்றார்.

இதன் மூலம் Bad Girl திரைப்படம், ஒரு தனித்துவமான கதையுடன் மட்டுமல்லாமல், வெற்றிமாறனின் தயாரிப்பு நிறுவனத்தின் இறுதி படமாகவும் சிறப்பு பெறுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vetri maaran Bad Girl 


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->