பிரபல சீரியல் நடிகை புற்று நோயால் மரணம்! சோகத்தில் திரையுலகம்!
Serial Actress Death IN Cancer
மராட்டியத்தை சேர்ந்த பிரபல இந்தி நடிகை பிரியா மராத்தே (38) கடந்த இரவு உயிரிழந்தார். பல்வேறு ஹிந்தி படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்த அவர், பவித்ரா ரிஷ்டா மற்றும் கசம் சே போன்ற தொடர்களின் மூலம் சிறந்த வரவேற்பைப் பெற்றிருந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை எடுத்து வந்தாலும், அவரது உடல்நிலை தொடர்ந்து சீராகவில்லை.
இந்நிலையில், நேற்று மாலை மும்பை மிரா சாலை பகுதியில் உள்ள தனது இல்லத்தில் அவர் காலமானார். அவருடைய மறைவு திரை உலகத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள், நண்பர்கள், சக நடிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய பிரியா மராத்தேவின் திடீர் மறைவு, ரசிகர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Serial Actress Death IN Cancer