மத்திய அரசுக்கு எதிராக 25 கோடி தொழிலாளர்கள் களம் – 12ம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தம்...!
25 crore workers take streets against central government nationwide strike 12th
மத்திய அரசின் தொழிலாளர் கொள்கைகளை கடுமையாக எதிர்த்து, நாடு முழுவதும் வரும் 12-ஆம் தேதி ஒரு நாள் முழு வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது.சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யூ.சி, எல்.பி.எப். உள்ளிட்ட 12 முக்கிய மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

தொழிலாளர்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
தொழிலாளர் நலச்சட்டங்களை சுருக்கி ‘லேபர் கோடு’ என்ற பெயரில் நான்கு சட்டங்களாக மாற்றி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைத்துள்ளதாக குற்றம்சாட்டி, தொழிலாளர்களும் விவசாயிகளும் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தத்தில் நாடு முழுவதும் சுமார் 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தபால் துறை, காப்பீட்டு துறை, வங்கிகள், தணிக்கைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களும் போராட்டத்தில் இணைவதற்கான தயாரிப்பில் உள்ளனர்.
தமிழகத்திலும் அரசு ஊழியர் சங்கங்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து களமிறங்க உள்ளன. மேலும், சென்னை அண்ணா சாலையில் உள்ள தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
25 crore workers take streets against central government nationwide strike 12th