காமன்வெல்த் போட்டி 2026; ஆண்களுக்கான 60 கிலோ பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரிஷிகாந்த சிங்..! - Seithipunal
Seithipunal


ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இன்று நடைபெற்ற, ஆண்களுக்கான 60 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் சனம்பம் ரிஷிகாந்த சிங், 'ஸ்னாட்ச்' பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ரிஷிகாந்த சிங் 'ஸ்னாட்ச்' பிரிவில் 121 கிலோவையும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 143 கிலோவையும் தூக்கி, மொத்தம் 264 கிலோ எடையை தூக்கியுள்ளார்.

இந்தப் போட்டியில் மலேசியாவின் முகமது அனிக் கஸ்டன், மொத்தம் 273 கிலோ (121 கிலோ ஸ்னாட்ச் மற்றும் 152 கிலோ கிளீன் அண்ட் ஜெர்க்) எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தை வென்றார். கென்யாவின் ஜோசுவா மபோயா மொத்தம் 260 கிலோ (115 கிலோ ஸ்னாட்ச் மற்றும் 145 கிலோ கிளீன் அண்ட் ஜெர்க்) எடையுடன் வெண்கலப் பதக்கத்தைக் வென்றுள்ளார்.

பாரா பவர்லிஃப்டர் ஜந்து குமார் வென்ற வெண்கலப் பதக்கத்தைத் பெற்றுள்ளதை தொடர்ந்து, நடப்புப் போட்டிகளில் இந்தியா வென்ற இரண்டாவது பதக்கம் இதுவாகும். அத்துடன், இதுவே இந்தியாவின் முதல் வெள்ளிப் பதக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rishikanta Singh wins silver medal in mens 60 kg weightlifting category at Commonwealth Games


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->