கொல்கத்தா நீட் எதிர்ப்பு போராட்ட வன்முறைக்கு காரணம் ஜமாத் (இஸ்லாமிய) அடிப்படைவாதிகள்; குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை; மாநில முதல்வர் உறுதி..! - Seithipunal
Seithipunal


கடந்த வெள்ளிக்கிழமை மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில்நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தின் போது ​​இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வன்முறையைத் தூண்டியதாக அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடந்த நீட் எதிர்ப்பு போராட்டத்தின் போது இடதுசாரி ஆதரவு போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களைக் பாதுகாப்புப் படையினர் கலைத்தனர்.

இந்த போராட்டத்தின் போது வன்முறையைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மாநில அரசு, புதிதாக இயற்றப்பட்டுள்ள 'குண்டர் தடுப்புச் சட்டத்தின்' (anti-goonda law) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

அதாவது, பேரணியில் அடையாளம் காணப்பட்ட சுமார் 70 பேர் மாணவர்கள் அல்ல என்றும், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டத்துடன் அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் மேற்கு வாங்க முதல்வர் சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார். அப்போது அவர்கள் அடுத்த மூன்று தலைமுறைகளும் நினைவில் வைத்திருக்கும் வகையிலான தண்டனையை எதிர்கொள்வார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், கர்கில் வெற்றி தின நிகழ்ச்சியில் பங்கேற்ற  சுவேந்து அதிகாரி, அதன் பின்னர் நந்திகிராமில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ''இவர்களுக்கும் இந்தப் போராட்ட இயக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் மாணவர்கள் அல்ல என்று குறிப்பிட்டதோடு, அவர்கள் ஜமாத் (இஸ்லாமிய) அடிப்படைவாதிகள் என்றும், அவர்களுக்கு வெளிநாட்டு சக்திகள் ஆதரவளித்தனவா என்பதை விசாரணை அமைப்புகள் தீர்மானிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், பதிவு செய்யப்படாத மதரஸாக்கள் மீதான நடவடிக்கை, OBC சான்றிதழ்கள் தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துதல், கால்நடை இறைச்சிக்கான சட்டங்களைச் செயல்படுத்துதல், ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட மாநில பாஜக அரசின் பல்வேறு முடிவுகள் மீதான அதிருப்தி காரணமாக அவர்கள் இந்த வன்முறையைத் தூண்டியிருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த போராட்டத்தின் போது ஊடகவியலாளர்கள் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டதாகவும், அவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

அத்துடன், வன்முறைக்கு காரணமாக இருந்தவர்களுக்கும் போராட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செய்தியாளர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், ''வினாத்தாள் கசிவை கட்டுப்படுத்தும் நோக்கில், திங்களன்று மக்களவையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ள 'பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுத்தல்) திருத்த மசோதா', ​தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதில் பிரதமர் நரேந்திர மோடி கொண்டுள்ள உறுதிப்பாட்டையே காட்டுகிறது.” என மேற்கு வாங்க முதல்வர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Swathi Adhikari alleges that Islamic fundamentalists are responsible for the violence during the Kolkata NEET protest


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->